180
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
எதிர்வரும் 3ம் திகதி நள்ளிரவு 12மணி தொடக்கம் 5ம் திகதி நள்ளிரவு 12மணி வரை இரண்டு நாட்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
• ஐந்து வருடங்களாக சேவையிலுள்ள அஞ்சல் சேவைதரம் 11 உத்தியோகத்தர்களின் நியமனங்களைஉடனடியாக உறுதிசெய்தல்.
• அஞ்சல் சேவைப் பிரச்சனைகளுக்கான தீர்வாக சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை தாமதமின்றி சமர்ப்பித்து ஒப்புதல் வழங்குதல்.
• தொழில்நுட்ப கோளாறுகளை சீர் செய்து வீழ்ச்சியுற்ற அஞ்சல் சேவையை மீண்டும் நிலைநிறுத்துதல்,
• 2012 பொறுப்பு அஞ்சல் அதிபர்; பரீட்சையை நடைமுறைப்படுத்துதல்.
• பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக பெற்றுக் கொடுத்தல்.
• பொறுப்பு அஞ்சல் அதிபர் பரீட்சையில் தோற்றிய முதல் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு MN-07 வேதனத்தை பெற்றுக் கொடுத்தல்
ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அதன் சங்க உறுப்பினர்களை இப்போராட்டத்தில் இணையுமாறு அழைப்புவிடுத்துள்ளது.
Spread the love