202
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும் இன்று சனிக்கிழமை மாலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் “ஈழத்தமிழ் அரசியல் செல் நெறியும், ஊடகங்களும் ஓர் சுய பரிசோதனை ” எனும் தொனிப் பொருளில் சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு.நடேசபிள்ளை வித்தியாதரன் நினைவுப் பேருரை ஆற்றியிருந்தார்.
மேலும் அஞ்சலி உரைகளை தமிழீழ விடுதலை இயக்க செயலாளர் நாயகம் ந.சிறீகாந்தா,வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
Spread the love