171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரில் ரபேல் நடால் இறுதிப் பதினாறு பேரைக் கொண்ட குழுவிற்குள் முன்னேறியுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் முதனிலையையும், நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தையும் வென்றவதாக நடால் கருதப்படுகின்றார்.
இந்த நிலையில் நடால் பிரெஞ்சு வீரரான ரிச்சர்ட் கஸ்குட் ( Richard Gasquet )ஐ வீழ்த்தி வெற்றியீட்டிள்ளார். 6-3 6-2 6-2 என்ற செற் கணக்கில் நடால் வெற்றியீட்டிள்ளார். தாம் சிறந்த முறையில் விளையாடியதாகவும் சிறந்த நண்பரை தோற்கடித்தமை வருத்தமளிப்பதாகவும் நடால் தெரிவித்துள்ளார்
Spread the love