குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சந்திரிகா, மஹிந்த, ஜயரத்னவுக்கு பதவி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின், ஆலோசனை குழு உறுப்பினர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன ஆகிய மூவருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
சு.கவின் துணைத் தலைவர்களாக அறுவர் நியமனம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களாக அறுவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சுமேதா ஜி.ஜயசேன மற்றும் பியசேன கமகே ஆகிய அறுவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிக சிரேஷ்ட துணைத் தலைவர்கள் நால்வர் நியமனம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின், தற்காலிக சிரேஷ்ட துணைத் தலைவர்களாக, நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, டப்ளியு.டீ.ஜே. செனவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
2 ஆம் இணைப்பு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்…
Jun 3, 2018 @ 06:09
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பிரியதாஸவும். கட்சியின் தற்காலிக தேசிய அமைப்பாளராக துமிந்த திஸாநாயக்கவும், தற்காலிக பொருளாளராக அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்தே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மத்தி செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது…
Jun 3, 2018 @ 04:09
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இந்த கூட்டம் கூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது தற்காலிக நிர்வாக குழுவொன்றை நியமித்து கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இடம்பெறவுள்ள விசேட மத்திய குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த கூட்டத்தில் அகில இலங்கை செயற்குழு மற்றும் நிறைவேற்றுக் குழு என்பனவும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.