157
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த கம்பன் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை(3) காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில்,கந்தையா நீலகண்டன் அரங்கில் சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் மஹா.தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,சிறப்பு விருந்தினராக முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நடனம்,நாடகம்,சிறப்புக்கவி,பட் டிமன்றம் ஆகியவை இடம் பெற்றதோடு,கம்பன் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.இதன் போது நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love