2006-ம் ஆண்டு 7 பேரை எரித்து கொன்ற ஜகத் ராய் என்பவரின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக இந்திய ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்த மாக்தோ என்பவர் மாட்டைத் திருடியதாக மேற்கொண்ட முறைப்பாட்டினை திருமட்ப பெற மறுத்தமையினால் ஜகத் ராய், மாக்தோவின் வீட்டுக்கு தீவைத்ததில் மாக்தோ, அவருடைய மனைவி மற்றும் 5 குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கில் ஜகத் ராயுக்கு தூக்கு தண்டனை விதித்திருந்தநிலையில தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜகத் ராய், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். இந்நிலையில்;, ஜகத் ராயின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில் இஅவரின் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.
ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்ற கொண்ட பின்னர் அவர் நிராகரித்த முதல் கருணை மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.