ரஸ்ய – இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ரக போர் ஹெலிகொப்டர்களை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழிற்சாலையை அமைக்க பெங்களூரு அருகே தும்கூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் எதிர்வரும் ஒக்டோபருக்கு மாதமளவில் நிறைவடையும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு ரஸ்யா ஆயுதங்களை விநியோகித்து வருகின்ற நிலையில் அதன் ஒரு கட்டமாக ரஸ்யாவிடம் இருந்து 200 கமோவ் ரக அதிநவீன ஹெலிகொப்டர்களை வாங்க இந்தியா முடிவெடுத்தது. இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி ரஸ்யா சென்ற போது கைச்சாத்திடப்பட்டிருந்தது.அந்தவகையில் மொத்தம 60 ஹெலிகொப்டர்களை ரஸ்யா வழங்கும் எனவும் மீதி 140 ஹெலிகொப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்தியாவில் கமோவ் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கமோவ் ரக ஹெலிகாப்டர்களை தாக்குதல் உட்பட பல வகையில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது