Home இலங்கை கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியா? நாடு கண்ணீர்வடிக்க வேண்டிய நிலை உருவாகும்…

கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியா? நாடு கண்ணீர்வடிக்க வேண்டிய நிலை உருவாகும்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

புதிய அர­சி­ய­ல­மைப்பை அர­சாங்கம் கொண்­டு­வரத் தவ­றி­ய­தா­லேயே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் 20 ஆவது திருத்­தத்தை நாங்கள் கொண்­டு­வந்தோம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை இருக்கும் நிலையில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை மக்கள் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்தால் முழு நாடும் கண்ணீர் வடிக்கவேண்டிய  நிலை ஏற்­படும் என பாராளுமன்ற  உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­னெத்தி தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்­தி­ருக்கும் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்­பாக கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரையாற்றிய  அவர் ,

அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரும்­போது, புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்படுத்துவதாகவும், அத­னூ­டாக நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமையை  இல்­லா­ம­லாக்­கு­வ­தா­கவும் மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. என்­றாலும் கடந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான எந்த கலந்துரையாடல்களும் இடம்­பெ­ற­வில்லை. அத­னால்தான் ஜனா­தி­பதி தேர்தலுக்கு  முன்னர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்லாமல் ஆக்கும் நோக்­கத்­துடன் 20ஆவது திருத்­தத்தை நாங்கள் கொண்­டு­வந்தோம்.

அத்­துடன் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்லாமல் ஆக்குவது எனக் அதி­கா­ரத்­துக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தெரி­வித்­தி­ருந்­தனர். ஆனால் அது இடம்­பெ­ற­வில்லை. அதனாலேயே தொடர்ந்தும் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தல்­வ­ரைக்கும் இதனை தொடராமல் இருக்க,  அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வரக்கூடியவர்  நிறை­வேற்று அதி­காரம் இல்­லா­த­வ­ராக தெரிவுசெய்யப்பட ப­ட­வே­ணடும் என நாங்கள் முயற்­சிக்­கின்றோம்.  மேலும் தற்­போதை ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பலரும் விமர்­ச­னங்­களை தெரி­வித்து நாட்­டுக்கு உறுதியான, அச்­ச­மின்றி தீர்­மானம் எடுக்­க­வேண்­டிய தலைவர் ஒருவர் அவ­சியம் என தெரிவிக்கின்றனர்.  அதற்­காக நிறை­வேற்று அதி­காரம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கக் கூடியவர்களும் இருக்­கின்­றனர்.

இவ்­வா­றான கருத்துகள் நாட்­டில்  நிலவும் தற்போதைய சூழலில் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ்வை  நியமிக்க வேண்டும் என்ற கருத்தும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ்வாறான  நிறைவேற்று ஜனா­தி­ப­தி­முறை இருக்கும் நிலையில் மக்கள் கோத்தாபய ராஜ­பக்ஷ்வை ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்தால் நாட்டு மக்கள் அனை­வரும் கண்ணீர் வடிக்க வேண்­டிய நிலையே ஏற்­படும்.

மேலும் நாங்கள் முன்­வைத்­துள்ள 20ஆம் திருத்தம் நாட்டை பிரிக்கக் கூடியது, ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அதி­கா­ரத்தை வழங்கும் நோக்கத்தில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. மற்றும் 13ஆம்  திருத்தத்தில்  ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்­கி­விடும் என்றும் சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர்.

ஆனால் அவ்­வா­றான எந்த விட­யமும் இதில் உள்­வாங்­கப்­ப­ட­வி­லிலை. மாறாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விலை­போ­காமல் கட்சி மாறுவதை  தடுத்­துள்ளோம். ஜனா­தி­ப­தியின் பொது மன்னிப்பில்  கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­டு­வது, ஜனா­தி­பதி கட்சி சார்­பற்­ற­வ­ராக இருப்­பது மற்றும் பாரா­ளு­மன்ற அமர்­வு­களை ஒத்­தி­வைக்கும் அதி­காரம் இல்­லா­ம­லாக்­குதல் போன்ற விடயங்களே  உள்வாங்கப்பட்டு இருக்கின்றன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­னெத்தி சுட்டிக் காட்டியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More