குவாத்தமாலாவிலுள்ள பியூகோ என்ற எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாத்தமாலாவில் எரிமலை வெடித்ததில் 7 பேர் பலி – 300 பேர் காயம் -அவசரநிலை பிரகடனம்
குவாத்தமாலாவிலுள்ள பியூகோ (Fuego) என்ற எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிககை 25 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குவாத்தமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதிலிருந்து வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை நோக்கி நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளில் தீபரவியதனால் அதிலிருந்தவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் எரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாத்தமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் தேசிய அளவில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 1974ஆம் ஆண்டுக்கு பின்னர் குவாத்தமாலாவில் நடைபெறும் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு இதுவென உள்ளூர் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.