இந்தியா முழுவதும் மருத்துவ கற்கைக்கான பொது நுழைவுப் பரீட்சையான நீட் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. நீட் பரீட்சையில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி இந்திய அளவில் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இன்றைய தினம் மணிக்கு வெளியாக வேண்டிய பரீட்சை முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது. மாணவர்கள் றறற.உடிளநநெநவ.niஉ.in என்ற இணையதளத்தில் பரீட்சை பெறுபேறுகளை அறிந்துகொள்ளலாம் என்று இந்தியப் பரீட்சை திணைக்களம் கூறியுள்ளது.
720 மதிப்பெண்களுக்காக நீட் பரீட்சை நடத்தப்பட்டது. இதில் 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இயற்பியலில் 180-க்கு 171, வேதியியலில் 180-க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360-க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் இருந்து 114602 பரட்சார்த்திகள் நீட் பரீட்சை எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் இவர் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.