இந்த வருடம் மார்ச் மாதத்திற்கு பின் வட மாநிலங்களில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதனால், பல மாநிலங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனை எதிர்கொள்ள முடியாமல் மக்களும், மாநில அரசுகளும் கடுமையாக போராடிவருவதாக வட மாநிலத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலா தலமான சிம்லாவில் தண்ணீர் பஞ்சம் நிலவி வந்த நிலையில், தற்போது ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. 5 மாவட்டங்கள் முழுமையாக வறண்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. கடும் வெப்பத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளதால் குழாய்கிணறுகளும் வரண்டுபோயுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் பெரும்பாலான கிராம மக்கள் தவித்து வருகின்றனர். சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. கட்டுமானம், கார் சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீருக்கான ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டு, காவற்துறை மூலம் வரிசை அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது.