பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். இன்று நடைபெறவிருந்த 4–வது சுற்று போட்டியில் ரஸ்ய வீராங்கனையான மரிய ஷரபோவாவை எதிர்கொள்ளவிருந்த நிலையில் போட்டி ஆரம்பமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, காயம் காரணமாக செரீனா போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
செரீனா விலகியதால் மரிய ஷரபோவா வெற்றி பெற்றவராக கருதப்பட்டு காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டு உள்ளார். காலிறுதியில் ஷரபோவா , முகுருசா அல்லது லேசியாவுடன் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது