பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால் மற்றும் சிமோனா ஹாலெப் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். நேற்றையதினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றுப் போட்டி ஒன்றில், ஸ்பெயினின் ரபெல் நடால் ஜேர்மனியின் மக்ஸ்மிலன் மார்ட்ரெரை 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு நான்காவது சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினாவின் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் 1-6, 2-6, 7-5, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் அண்டர்சனை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தநிலையில் காலிறுதியில் நடால் மற்றும் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் போட்டியிடவுள்ளனர்.
மற்றொரு போட்டியில் அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நான்காவது சுற்றுப் போட்டி ஒன்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் பெலிஜியத்தின் எலிசி மெர்டென்சை 6-2, 6-1 என்ற நேர்செட்டில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் என்ற நேர்செட்டில் ரஸ்யாவின் டாரியா கசட்கினா டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி தோற்கடித்து 6-7 (5-7), 3-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் ஜேர்மனியின் அஞ்சலிக் கர்பர் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்சின் கரோலின் கார்சியாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, உக்ரைன் வீராங்கனை லிசி சுரெங்கோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.