குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பொலித்தீன் தடை நீக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ‘பொலித்தீன் தடைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் செய்த ஒரே ஒரு நாடு இலங்கையாகும் என இவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலித்தீன் தடை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை ரத்துச் செய்வதற்கு பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அமைச்சரவையிலும் அந்த யோசனை முன்வைக்கபப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் தாம் அதற்கு பின்வாங்க வில்லை எனவும் அதனை ரத்துச் செய்ய முடியாது என கூறியதாகவும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சுற்றாடல் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் நேற்று கேகாலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்த்துள்ளார்.