காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் , எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகின்ற நிலையில் இந்த பிரச்சினை தொடர்பில் நடுவர் மன்ற தீர்ப்பை அமுல்படுத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையகத்தை அமைத்துள்ளது.
சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி இறுதி முடிவெடுப்பதாக நடத்தி முடிவு எடுப்பதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை நேற்றையதினம் சந்தித்து பேசிய பின்னர் அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே குமாரசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு என இரு மாநில விவசாயிகளுமே தாங்களுக்கு முக்கியமானவர்கள் எனவும் காவிரி பிரச்சினையில் கர்நாடக விவசாயிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை தான் என்ற போதிலும் இவற்றை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். என அவர் தெரிவித்துள்ளாh.
பிரச்சினைகளையும் இரு மாநில விவசாயிகள் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயார் எனவும் குமாரசாமி தெரிவித்தார்