குவாத்தமாலாவிலுள்ள பியூகோ என்ற எரிமலை வெடித்ததில் 62 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று அங்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பியூகோ எரிமலை வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவியதையடுத்து குவாத்தமாலா விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டதுடன் அங்கு அவரசரகால நிலையும் பிரகடனப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்கு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 10 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது