இலங்கையில் இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி தொற்றால் 2933 நபர்களும், எய்ட்ஸ் நோயால் 723 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயினால் 09 மரணங்கள் சம்பவித்துள்ளள என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இறுதியில எச். ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்வர்களாக 10 ஆயிரத்துக்கு அதிகமான நபர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். இதேவேளை இவ்வருடத்தின் முதல் காலாண்டு பகுதியினையும் (ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில்) கடந்தவருடத்தின் காலாண்டு பகுதியினையும் ஒப்பிடுகையில், பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தை விட அதிகமாக கணக்கிடப்பட்டுள்ளதாக, தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள இவ்வருடத்துக்கான காலாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வருடத்தில் இந்நோயுடன் தொடர்புபட்ட வகையில் 9 மரணங்களும் சம்பவித்துள்ளன. எயிட்ஸ் தொற்றினால் 1939 ஆண்களும் 994 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் எயிட்ஸ் நோயினால் 510 ஆணகளும் 213 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையில் பரவும் பாலியல் நோய்களுடன் தொடர்புப்பட்ட எச். ஐ.வி மற்றும் எயிட்ஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தபட்டு வருவதாகவும் விழிபுணர்வு நடவடிக்கைகளும் அமுல்படுத்தபடுவதாகவும் பாலியல் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.