213
உலக சுற்றுச் சூழல் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவினரால் உலக சூழல் தினம் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக “பிளாஸ்ரிக் மாசை இல்லாது ஒழிப்போம் மீளப் பயன்படுத்த முடியாதென்றால் அதனை முற்றாக நிராகரிப்போம்” தெரிவு செய்யப்பட்டது. நிகழ்வுகள் யாவும் இன்று (05/06/2018) காலை 10.00 மணியளவில் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் ஆரம்பமாகியது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பழைய மாணவனும், யாழ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரும் வாழ் நாள் பேராசிரியருமாகிய பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்தார். கல்லூரி அதிபர் திரு சதா. நிமலன், பாடசாலை ஆசிரியர்கள், சாரணர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வில் கலந்துசிறப்பித்தனர்.
சாரண ஆசிரியர் திரு.க.சுவாமி நாதன் அவர்களால் “சூழலும் சமூகமும்” என்ற கோட்பாட்டிலான உரை நிகழ்த்தப்பட்டது. பிரதம விருந்தினர் அவர்கள் தனது சிறப்புரையில் உலக சுற்றுச் சூழல் தினம் ஆரம்பிக்கப்பட்டமையின் உள்ளார்ந்த சிந்தனைகளையும், அவை அடிப்படையிலான நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெரிவித்தார். அத்துடன் மாணவர்களுக்கான புவி வெப்பமடைதல் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது.
குறித்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் அடையாள பூர்வமாக மரக்கன்றுகள் சாரணர்களுக்கு வழங்கப்பட்டு பாடசாலை வளாகத்தில் நடப்பட்டது. உலக சுற்றுச் சூழல் தினமானது வருடா வருடம் யாழ் இந்துக் கல்லூரி சாரணர்களால் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
Spread the love