குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கையின்; தற்போதைய அரசாங்கம் தான் எண்ணியது போல் வரிகளை அறவிடுவதால், மக்கள் மிகவும் பரிதாப நிலைமைக்கு சென்றுள்ளதால், தனது அரசாங்கத்தின் கீழ் தற்போதுள்ள வரியை 20 வீதமாக குறைக்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி, அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற போவதாகவும் மக்கள் தற்பொழுது புதிய அரசாங்கத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் இன்றைய அரசாங்கம் மக்களுக்கு எந்த சேவையையும் செய்யவில்லை என்பதால் மக்கள் புதிய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவார்கள் என நம்புவதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.