காஸா பகுதியில் பாலத்தீனியர்களை இஸ்ரேல் நடத்தும் விதம் தொடர்பில் எழுந்த அரசியல் அழுத்தங்களை அடுத்து இஸ்ரேலுடன் விளையாட இருந்த கால்பந்து உலக கோப்பை பயிற்சி விளையாட்டு போட்டி ஒன்றை அர்ஜென்டினா ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா ஊடகங்கள் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ள அதுவேளை இஸ்ரேல் கால்பந்து சங்கத்திடமிருந்து இது தொடர்பில் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
இது தொடர்பில் பாலத்தீனிய கால்பந்து சங்கம் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கும் ஏனைய வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ரத்தின் மூலமாக இஸ்ரேலுக்கு எதிராக சிவப்பு அட்டை எழுப்பப்பட்டுள்ளதாக பாலத்தீனிய கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜிப்ரீல் ரஜோப் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக அர்ஜென்டினா பாலத்தீனியத்துடன் விளையாடக் கூடாது என்ற தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பாலத்தீனிய மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அர்ஜென்டினாவுடனான உறவை வலுப்படுத்தும் நோக்குடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யா{ஹ அர்ஜென்டினா ஜனாதிபதி; மௌரிசியோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது