குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிரதி சபாநாயகர் தெரிவின் போது எதிர்க்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவின் பெயரை பரிந்துரைத்தை அடுத்து, கூட்டு எதிர்க்கட்சியினர் சிலர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டதுடன் அவையில் இருந்தும் வெளிநடப்புச் செய்தனர்.
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, காஞ்சன விஜேசேகர, தாரக பாலசூரிய, கனக ஹேரத், ஷெயான் சேமசிங்க, ரமேஷ் பத்திரன, குமார வெல்கம, ரோஹித்த அபேகுணவர்தன, மொஹன் டி சில்வா, டி.வி.சானக்க உட்பட 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
பிரதமருக்கு எதிராக அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியில் பிளவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பிளவு நேற்று வெளிப்படையாக தெரியவந்தமை விசேட அம்சமாகும்.