பங்களாதேசில் தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்யா முஸ்லிம்களின் மறு சீரமைப்புக்கு தேவையான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். மியன்மாரின் ரக்கினே மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் காரணமாக சுமார் 7 லட்சம் ரோகிங்யா முஸ்லிம் மக்கள் அகதிகளாக பங்களாதேசை சென்றடைந்துள்ளனர். அவர்கள் பங்களாதேசில் காஸ் பஜாரில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ராணுவம் உதவி செய்து வருகிறது.
இந்நிலையிலேயே அங்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்யா முஸ்லிம்களின் மறு சீரமைப்புக்கு தேவையான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதித்துறை அமைச்சா அபுல்மால் அப்துல் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2018-19ம் நிதியாண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரோகிங்யா மக்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்க முடிவுசெய்துள்ளதாகவும் இந்த நிதியால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.