குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவிலுள்ள சல்லி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
குறித்த பிரதேசத்தில் ஆலய உற்சவம் ஒன்று இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆலயத்திற்குச் சென்ற திருகோணமலை நகர் பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கும் சல்லி பிரதேசத்திலுள்ள மற்றுமொரு குழுவினருக்கும் இடையேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.