குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகிறது.
நிறுவன பதிவாளர் மற்றும் அதிகாரி ஒருவரும் விசாரணைக்காக இன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த இருவரிடமும் கடந்த 04ம் திகதியும் சாட்சி பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் அனில் குணரத்ன உள்ளளோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது