தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் விசாரணையை ஆரம்பிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போது நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணை செய்ய தீர்மானித்த நீதிபதி அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்திற்குச் சொந்தமான 2992 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் , முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது