குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குரேஸியாவின் புகழ் பூத்த முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஸிட்ராக்கோ மிமிக் ( Zdravko Mamic )க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குரேஸிய கால்பந்தாட்டத்துறையின் மிகவும் முக்கியமான நபராகக் கருத்பபடும் ஸிட்ராக்கோ மிமிக் மீது மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு முன்னதாக ஸிட்ராக்கோ மிமிக் பொஸ்னிய எல்லை வழியாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ஸிட்ராக்கோ மிமிக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.