166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கோரி சிம்பாப்வேயில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேயின் பிரதான எதிர்க்கட்சியே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. கிராமப் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி எமர்சன் மனன்காவா ( Emmerson Mnangagwa )படைவீரர்களை பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 30ம் திகதி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் சிம்பாப்வேயில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் சுயாதீனமான முறையில் தேர்தலை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி எமர்சன் மனன்காவா தெரிவித்துள்ளார்.
Spread the love