தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் களத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த வட்டாச்சி அதிகாரிகள், 10 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே உத்தரவை பிறப்பித்ததாக வெளியாகி உள்ள தகவலை அடுத்து சர்ச்சை உருவாகி உள்ளது. துப்பாக்கி சூடு தொடர்பில் ஆய்வு செய்யும் குழுவினர், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திவித்தவர்கள், எதற்காக 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து செயற்பட்டு இருக்க வேண்டும் என்பதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தூத்துக்குடி துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, தமிழக அரசினால் நியமிக்கப்பட்ட குழு பயனற்றது என, எதிர்க் கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க ஸ்டாலின் , துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணை நடத்த, சி.பீ.ஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் இதனை ஊடகங்ளுக்கு தெரிவித்துள்ளார்.