சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பிரித்தானிய மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி தமது கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.
அதேnவுளை ஐ.எஸ். ஆமைப்பினரும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள நிலையில் இவர்களைக் கட்டுப்படுத்த அமெரிக்க விமானப் படையின் துணையுடன் சிரிய நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், சிரியாவின் தென் பகுதியில் நேற்றையதினம் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் 17 பேர்; கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 6 படைவீரர்களும் உள்ளடங்குவதாக சிரியாவில் உள்ள பிரித்தானிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது