குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று (8) வெள்ளிக் கிழமை 10 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் எதிர் வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படு;ம் என அறிவிக்கப்பட்டுள்ளது
-மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் காவல்துறையினர் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வந்தது. தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகளின் போது மனித எலும்புகள்,மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டு திங்கட்கிழமை காலை இடம்nபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது