குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரகசிய காவல்துறையினர் தன்னை கைது செய்வதனை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 19ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு இன்றையதினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திய சம்பவத்தில் தன்னை கைது செய்வதற்கு இரகசிய காவல்துறையினர் முயற்சிப்பதாக நிசாங்க சேனாதிபதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் குறித்த ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அமைச்சரவை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படடிருநடததாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தன்னை ரகசிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட முறையானது சட்டவிரோதமான முறையில் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருந்தது எனவும் எனவே தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு நிசாங்க சேனாதிபதி தனது மனுவில் தெரிவித்திருந்தார்