,
சிரியாவிடம் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, தமது அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில்; கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள இட்லிப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் மீது நேற்றிரவு போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த தாக்குதலை ரஸ்ய போர் விமானங்களே நடத்தியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள அதேவேளை தமக்கும் இந்த தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என ரஸ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment