அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் 12ம் திகதி சிங்கப்பூரில் உள்ள சென்தோசா விடுதியில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்புக்கு முன்னதாக கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்கவுள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற தகவலை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் வெளியிட்டுள்ளார். மேலும் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ராணுவ தளபதிகள் மூவரையும் அவர் மாற்றியுள்ளார்.
தென்கொரியாவிலும் சிலர் அவரைக் கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும் அவருக்கு தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அவரது அச்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, சந்திப்பு நரைடபெறவுள்ள சென்தோசா விடுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சென்தோசா விடுதிப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.