காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த நான்கு வாரங்களாக வெள்ளிக்கழமைதோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்து கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிப் பரயோகம் மேற்கொண்டுள்ளது.இதில் நான்கு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன