குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பாதுகாப்பு உயர் அதிகாரிகள் தம்மை சந்திப்பினை நிராகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள் தம்முடன் சந்திப்பு நடத்துவதற்கு விரும்புவதில்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு அறிவிப்பது என்பது பிரச்சினையாக மாறியுள்ளது என கூறிய அவர், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி தம்முடனான சந்திப்புக்களுக்கு நேரத்தை ஒதுக்க முடியாது என வடக்கின் உயர் கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.