ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை பாகிஸ்தான் படையினரின் தாக்குதலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள கெரன் எல்லைப்பகுதியில் இன்று காலை தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர் எனவும் அவர்களுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டதாகவும் ஏனையோர் அங்கிருந்து தப்பி சென்றறுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது