160
ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவூதி அரேபியாவை சேர்ந்த 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏமனில் அரசாஙகத்துக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை ஏமன் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்ற சவூதிஅரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஹவுத்தி போராளிகளை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனில் இருந்து சவூதி அரேபியா நோக்கி ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், பலர் காயமடைந்துளடளதாகம் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love