தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் (Dale Steyn) காயத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில், மீண்டும் அணிக்குத் திரும்பி மீண்டும் போட்டிகளுக்கு தயாராகியுள்ளார் . கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கடைசியாக விளையாடிய ஸ்டெயின் அதன்பின் கால் மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் சோமர்செட் அணியில் இடம் பெற்று விளையாடிய ஸ்டெயின் சசெக்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசியுள்ளதையடுத்து, மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ; தேர்வாகியுள்ளார். எனவே இலங்கைக்கு ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியில் சார்பில் 35 வயதாகும் டேல் ஸ்டெயின் டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் விளையாடுவதற்காக தேர்வாகியுள்ளார்.
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க நாடுகளுக்கிடையில் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி என்பன நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது