174
பல்கேரியாவில் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர். குருமோவோ விமானப் படைத்தளத்தில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குறித்த ராணுவ ஹெலிகொப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தநிலையில் அதில் பயணித்த இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதுடன் விமான நிறுவன ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த விமான விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love