ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் இரு தரப்புக்கும் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 3 மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது