ஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜூலேன் லோபெட்டேகு (Julen Lopetegui) திடீரென நீக்கப்பட்டுள்ளார். ரியல் மட்ரிட் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டமை காரணமாக அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ரஸ்யாவில் ஆரம்பமாகவுள்ள 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர்பில் கிண்ணம் வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக ஸ்பெயினும் கருதப்படுகின்ற நிலையில் இவ்வாறு தலைமைப் பயிற்சியாளர் இன்று நீக்கப்பட்டுள்ளார்.
ஜூலேன் லோபெட்டேகுய் ரியல் hட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக மூன்று வருடம் பணிபுரிய சம்மதம் தெரிவித்துள்ளமை தொடர்பிலேயே இவ்வாறு ஜூலேன் லோபெட்டேகுய் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்துக்கு அறிவிக்காமல் ரியல் hட்ரிட் அணிக்கு பயிற்சியாளராக சம்மதம் தெரிவித்துள்ளார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது