அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து அவர்கள் தரப்பால் தொடர்ந்த வழக்கின் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டதும், தினகரனின் ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் சென்று மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து அவர்ளை தகுதி நீக்கம் செய்து 18-9-2017 அன்று தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்ததும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை காலை 10.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரை கொண்ட அமர்வின்போது இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.