பிரதமர் மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி டெல்லி உயர்நீதிமன்றில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியை சேர்ந்த குஜராத் முன்னாள் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.
பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ள நிலையில் அவர் பதவியேற்றதில் இருந்து பாராளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 முறை மட்டுமே பேசியுள்ளமை குறித்தே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இதுவரை பல முறை பாராளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் பாராளுமன்றம் வந்துள்ளார். அதிலும் சராசரியாக ஆண்டிற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் பாராளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் நாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார் எனவும் இந்த நான்கு நாட்களில் பாராளுமன்றத்தில் இருந்ததை விட அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் மக்கள் பிரச்சனைகள் எதிலும் அவர் பேசவேயில்லை எனவும் பாராளுமன்றம் நடக்கும் சமயங்களில் பிரதமர் மோடி அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார் எனவும் மமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது