குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அதகிhரிகளுக்கும் லெபனானின் காபந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏதிலிகள் விவகாரம் தொடர்பிலேயே இவ்வாறு முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. சிரிய ஏதிலிகள் நாடு திரும்புவதனை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தடுத்து வருவதாக காபந்து வெளிவிவகார அமைச்சர் கெப்ரான் பாஸ்ஸில் ( Gebran Bassil ) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அதிகாரிகள் லெபனானில் தங்கியுள்ள சிரிய ஏதிலிகள் நாடு திரும்புவதனை தடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுத்து நிறுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.