ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கியமான ஹூடேடா துறைமுக நகரத்தை கைப்பற்ற, சவூதிஆதரவு பெற்ற அரச படைகள் நடத்தும் தாக்குதல் தீவிரமாகி உள்ளநிலையில் இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. இந்த தாக்குதலில் தனது நாட்டை சேர்ந்த 4 ராணுவத்தினர் இறந்துள்ளதாக ஐக்கிய அரபு ராச்சியம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த மோதலில் 22 ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் விமானநிலையம் அருகே நடந்துவரும் மோதல் மிகவும் தீவிர நிலையை எட்டியுள்ளது என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இன்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. தற்போது இந்த துறைமுகப்பகுதியில் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் போரால் பாதிக்கப்பட்ட 80 லட்சம் பேர் பட்டினியால் துன்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.