185
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முன்னதாக இவ்வாறு ஒரு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த போதிலும், அவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோள் தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love