முல்லைத்தீவு மாவட்டத்தில் நுண்கடன் நிதி நிறுவனங்களினால் ஏற்படுத்தப்படும் சமூக அவலங்களுக்கு எதிரான விழிப்புணர்வின் போது இராணுவப் பாணியில் பிரபல நுண்நிதி நிறுவனம் ஒன்று மக்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்துள்ளது. நுண்நிதி கடன்களால் சமூக அவலத்தை தடுக்கவும் பெண்களை பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும்வகையில் இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ளன.
இனிவரும் நாட்களில் இந்த புகைப்படங்களை வைத்து குறித்த நிறுவனத்தில் தாம் பெற்ற கடன்களை திருப்ப செலுத்தும்போது அந்த நிறுவன ஊழியர்களால் அழுத்தங்களுக்கு உட்படுத்த படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் தெரிவித்தனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர்பகுதியில் 8க்கு மேற்பட்ட நுண்நிதி கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.இதனால் நாள்தோறும் பல பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள்.