162
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சிரேஸ்ட பத்திகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரைசிங் காஷ்மீர் பத்திரிகை என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சுஜாத் புகாரி என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று மாலை அவர் காரில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த இன்நதெரியாத நபர்கள் அவர்மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாகவும் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவரது பாதுகாவலர்கள் இருவரும் காயம் அடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
Spread the love