185
ரஸ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடர் கோலாகல கலைநிகழ்ச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி முதலாவது போட்டியில் இன்று ரஸ்யா மற்றும் சவூதி அரேபிய அணிகள் போட்டியிடவுள்ளன.
போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக இடம்பெற்ற தொடக்க விழாவில் இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.
Spread the love