தொடர்ச்சியாக சட்டவிரோதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகள், மகன்கள் மற்றும் டிரம்ப் அறக்கட்டளை மீது நியூயோர்க்கின் சட்டமா அதிபர் பார்பரா அன்டர்வூட் ( Barbara Underwood ) வழக்கு தொடர்ந்துள்ளார்
2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், டிரம்ப் அறக்கட்டளை அமைப்பானது சட்டவிரோத அரசியல் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் அறக்கட்டளையை கலைத்து விட்டு 2.8 மில்லியன் டொலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் சட்டமா அதிபரால் தொடரப்பட்ட வழக்கில் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அறக்கட்டளை, இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது